விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மாட்ரிட் ஓபனில் 3-ஆவது முறையாக பட்டம் வென்ற சபலென்கா..!
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா பட்டம் வென்று அசத்தினார்.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா தரவரிசையில் 4ஆவதாக இருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃபுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் 6-3, 7-6 (3) என்ற செட்களில் சபலென்கா அசத்தல் வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டி 1 மணி நேரம் 39 நிமிஷங்கள் தொடர்ந்தது. இதில் முதல், இரண்டாவது சர்வீஸ்களில் முறையே 68, 75 சதவிகித வெற்றிகளைப் பெற்றார்.
இருவரும் இதுவரை 10 முறை சந்தித்து கௌஃப் 5 முறையும், சபலென்கா 5 முறையும் வென்றுள்ளனா்.
மாட்ரிட் ஓபனில் இது சபலென்காவுக்கு 3ஆவது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது சபலென்காவுக்கு இது 20ஆவது சாம்பியன் பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரையிறுதியில் சபலென்கா 6-3, 7-5 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 17-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 1 மணி நேரம், 32 நிமிஷங்களில் சாய்த்திருந்தார்.
இறுதியில் வென்றது குறித்து சபலென்கா கூறியதாவது: இது மிகவும் கடினமான போட்டி. 2ஆவது செட்டின் கடைசியில் மிகவும் தீவிரமாகச் சென்றது. நான் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். அதைச் சரியாக கையாண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.