மும்பையில் புல்லட் ரயில் நிலையம்: ‘வேகமாக நடைபெறும் கட்டுமானப் பணிகள்’
மத்தியப் பிரதேசம்: சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பலி, ஒருவர் காயம்
மத்தியப் பிரதேசத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் சூறைக்காற்றின் போது மரம் விழுந்ததில் இரண்டு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்தனர் என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை ராம் டோரியா பஞ்சாயத்தில் உள்ள குஞ்சோரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு எப்போது ஒழியும்?: அன்புமணி ராமதாஸ்
சூறைக்காற்று காரணமாக மரம் விழுந்ததில் பிருந்தாவன் லோதி (50) மற்றும் பால்ராம் லோதி (35) ஆகியோர் பலியானதாக துணைப்பிரிவு காவல் அதிகாரி அமித் அமாவா கூறினார்.
பழைய மரத்தின் கீழ் ஒரு குழு பூஜை செய்து கொண்டிருந்தபோது அது விழுந்ததாக முன்னாள் ஜன்பத் பஞ்சாயத்து உறுப்பினர் ராம்கிருபால் சர்மா தெரிவித்தார்.