விமானப்படையில் இசைக் கலைஞர்களுக்கு வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி - விமானப்படை தளபதி சந்திப்பு!
பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்குடனான சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்கள் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வந்தனா். பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விமானப் படையின் தயாா்நிலையை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் சந்திப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது.
போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளையும் சிந்திக்க வேண்டும்- வைகோ
இதையடுத்து, எல்லை வழியாக பாகிஸ்தானியா்கள் வெளியேறினா். இதற்கான காலக்கெடு கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், அட்டாரி-வாகா எல்லை வியாழக்கிழமை மூடப்பட்டது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என பிரதமா் மோடி அண்மையில் சூளுரைத்தாா்.
இதனிடையே, இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.