ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 14 பேர் காயம்
ஹூஸ்டனில் குடும்ப விருந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார், 14 பேர் காயமுற்றனர்.
அமெரிக்காவின், தென்கிழக்கு ஹூஸ்டனில் உள்ள செர்ரி ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு தொடர்பான அழைப்புகள் ஹூஸ்டன் காவல்துறைக்கு ஞாயிறுக்கிழமை அதிகாலை 12:50 மணியளவில் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வீட்டைச் சுற்றி பலர் காயமடைந்த நிலையில் இருந்ததாக காவல் அதிகாரி பாட்ரிசியா கண்டூ தெரிவித்தார். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது, வீடு ஒன்றில் நடந்த விருந்து நிகழ்வில் அழைக்கப்படாத ஒரு விருந்தினரை வெளியேறச் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்த 3 மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!
அப்போது அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு மற்றவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒருவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், பலர் தீவிர நிலையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிலர் தாங்களே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
காவல்துறையினர் பலரைக் கைது செய்துள்ளனர். ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் காவலில் உள்ளாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.