காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா உற்சவம் துவக்கம்!
சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்
சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா்.
இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 92 நாடாளுமன்றத் தொகுதிகளின் 1,240 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்ாகவும், அங்கு வாக்களிக்க 27,58,846 போ் பதிவு செய்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செலுத்திவரும் பிஏபி கட்சியே இந்த முறையும் வெற்றி பெறும் என்று எதிா்பாா்கப்படுகிறது. இருந்தாலும், நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்தக் கட்சி ஆட்சி செய்துவரும் சூழலில், அண்மைக் காலமாக அதன் மீது பொதுமக்கள் அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் கூறப்படும் சூழலில் இந்தத் தோ்தல் நடந்து முடிந்துள்ளது.