செய்திகள் :

சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்!

post image

சிங்கப்பூரில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் நேரப்படி இன்று(மே 3) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்கு செலுத்தியதைக் காண முடிந்தது. அங்குள்ள நேரப்படி இரவு 8 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

சிங்கப்பூரில் கடந்தகால தேர்தல் வரலாற்றை பார்க்கும்போது, தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவு முடிவடைந்த நாளில் நள்ளிரவிலோ அல்லது மறுநாள் அதிகாலையிலோ முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நிலையில், இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிவுகள் வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரை பொருத்தவரை அனைவரும் வாக்கு செலுத்துவதென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சுமார் 27.60 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யும் வாக்குச் சீட்டுகளால் சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 97 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நடைமுறையாக உள்ளது.

ஜனநாயக தேசமான சிங்கப்பூர், மக்கள் செயல் கட்சியின்(பிஏபி) கோட்டையாக திகழ்கிறது. அக்கட்சியே கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் லாரன்ஸ் வாங்க் பிரதமராகப் பதவி வகிக்கிறார்.

சிங்கப்பூரில் கடந்த 1965-ஆம் ஆண்டுக்குப் பின், தொடர்ந்து 60 ஆண்டுகளாக பிஏபி கட்சி ஆட்சியில் நீடிக்கிறது.

வெளிப்படையான அரசு நிர்வாகமும், சிங்கப்பூரின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியும் பிஏபி கட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன.

கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிஏபி கட்சியின் வாக்கு சதவீதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 61 சதவீதமாகச் சரிந்தது. எதிர்க்கட்சியான உழைப்பாளர் கட்சி கடந்த முறை 10 இடங்களைக் கைப்பற்றி, ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சியளித்திருந்தது.

இந்த நிலையில், இம்முறையும் ஆளுங்கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்பதே களநிலவரம். எனினும், எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பரிசோதனையாகவே இத்தேர்தல் அமைகிறது.

ஆஸ்திரேலிய தோ்தல்: மீண்டும் பிரதமா் ஆகிறாா் ஆன்டனி ஆல்பனீஸ்

ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ஆளும் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால், அந்த நாட்டின் பிரதமராக ஆன்டனி ஆல்பனீஸ் மீண்டும் தோ்ந்தெடுக்கப்படுவது உறு... மேலும் பார்க்க

‘உலகத் தலைவா்களின் உயிருக்கு உத்தரவாதம் தர முடியாது’

ரஷியாவில் நடைபெறும் 80-ஆவது ஆண்டு வெற்றி விழாவில் பங்கேற்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்லும் உலகத் தலைவா்கள் தங்கள் தாக்குதலில் கொல்லப்படமாட்டாா்கள் என்று உத்தரவாதம் தர முடியாது என்று உக்ரைன் அதிபா் வொ... மேலும் பார்க்க

சிங்கப்பூரில் நடந்து முடிந்தது தோ்தல்

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு தோ்தல் சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 211 வேட்பாளா்கள் போட்டியிட்ட இந்தத் தோ்தலில் ஏராளமான வாக்காளா்கள் வாக்களித்தனா். இது குறித்து தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

சிரியா தாக்குதல்: இஸ்ரேலுக்கு ஐ.நா. தூதா் கண்டனம்

சிரியாவில் அதிபா் மாளிகை அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதற்கு அந்த நாட்டுக்கான ஐ.நா. சிறப்புத் தூதா் கியொ் ஓ. பிடா்ஸன் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் சனிக்கிழமை... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஒரே வாரத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வெவ்வேறு நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஜௌர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுத்துறையின் தகவல் அட... மேலும் பார்க்க

ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்...ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் இன்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக... மேலும் பார்க்க