செய்திகள் :

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலைக் கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம்

post image

திருக்குவளை: நாகை மாவட்ட மீனவர்கள் 24 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய கொலை வெறி தாக்குதல் விவகாரத்தை கண்டித்து செருதூர் மீனவ கிராமத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சுமார் 300-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடற்கரை ஓரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், ஆற்காட்டுதுறை, செருதூர் ஆகிய நான்கு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஐந்து படகுகளில் சென்ற 24 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தி பொருட்களை பறித்து சென்றனர்.

குறிப்பாக செருதூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு படங்களில் சென்ற 10 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் நடத்திய தாக்குதல் விவகாரத்தை கண்டித்து அந்த கிராமத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி இன்று (மே 4) செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் அதிகமான பைபர் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

ஏற்கனவே மீன்பிடித்தடை காலம் அமலில் இருக்கும் காரணத்தால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாத சூழலில், தற்பொழுது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலால் பைபர் படகு மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செருதூர் கிராம மீனவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இன்று மனு அளிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், லட்சக்கணக்கான மீன்பிடி உபகரண பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர் ‌

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு தொடங்கியது

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் தொடங்கியது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பின் அகில இந்... மேலும் பார்க்க

நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நத்தம் அருகே எட்டையம்பட்டி கிராமத்தில் நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டையம்பட்டி கிராமத்தில் 50 ஏ... மேலும் பார்க்க

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை சிந்திக்க வேண்டும்- வைகோ

போரை ஆதரிப்பவர்கள் அதன் பாதிப்புகளை சிந்திக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஹல்காமில் 26 அப்பாவிப் பொத... மேலும் பார்க்க

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தினை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேருந்து நிலையம் 2... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்து - கார் மோதல்: 4 பேர் பலி

திருத்துறைப்பூண்டி அருகே அரசுப் பேருந்தும் காரும் மோதியதில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கருவேப்பஞ்சேரி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சா... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறை காரணமாக உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக... மேலும் பார்க்க