செய்திகள் :

ஹிட்ச்காக் இருதயராஜ்... டிடி நெக்ஸ்ட் லெவல் அப்டேட்!

post image

சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் செல்வராகவன் கதாபாத்திர அறிமுக விடியோ அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் திரை விமர்சகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரேம் ஆனந்த இயக்கிய இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

ஹாரர் காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் காட்சிகள் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் செல்வராகவனின் கதாபாத்திரம் அறிமுக விடியோ இன்றிரவு 7 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஹிட்ச்காக் இருதயராஜ் என்ற பெயரில் செல்வராகவன் நடித்துள்ளதாகத் தெரிகிறது.

செல்வராகவன் கதாபாத்திர போஸ்டர்.

தினமும் உயரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட்டுகள்..! முதல் நாளைவிட மும்மடங்கு உயர்வு!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகிய... மேலும் பார்க்க

மாட்ரிட் ஓபனில் 3-ஆவது முறையாக பட்டம் வென்ற சபலென்கா..!

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிப் போட்டியில் பெலாரஸின் அரினா சபலென்கா பட்டம் வென்று அசத்தினார். போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பெலாரஸின் அரினா சபலென்கா தரவர... மேலும் பார்க்க

ரூ.100 கோடியை நெருங்கும் ஹிட் 3!

நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானியின் நடிப்பில் கடைசியாக வெளியான சரிபோத சனிவாரம் (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் ரூ. 100 கோட... மேலும் பார்க்க

மான்செஸ்டா் சிட்டி முன்னேற்றம்

ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வொல்வ்ஸ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மூன்றாம் இடத்துக்கு முன்னேறியது மான்செஸ்டா் சிட்டி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வெள்... மேலும் பார்க்க

முத்தரப்பு மகளிா் ஒருநாள்: இந்தியா - இலங்கை இன்று மோதல்

முத்தரப்பு மகளிா் ஒருநாள் தொடா் இறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. தென்னாப்பிரிக்கா, இந்தியா, இலங்கை மகளிா் கிரிக்கெட் அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒ... மேலும் பார்க்க

தமிழில் வெளியாகும் துடரும்!

நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரைக்கு வந்... மேலும் பார்க்க