செய்திகள் :

மும்பை: `கார் சதுரங்க வேட்டை' 1375 பேரிடம் ரூ.20 கோடி மோசடி செய்த கும்பல்.. 246 வாகனங்கள் மீட்பு

post image

மும்பையில் நடந்த வாடகை கார் திட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் மோசடி செய்யப்பட்டுள்ளனர். மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்த பாவேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக போலீஸார் விசாரித்து மிகப்பெரிய மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சந்தீப் என்பவர் தான் வாடகை கார் வியாபாரம் செய்வதாகவும், மும்பை விமான நிலையம், மும்பை துறைமுகத்தில் வாகனங்களை வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதாக பாவேஷிடம் தெரிவித்தார்.

மேலும் பாவேஷிடம் கார் வாங்கி தன்னிடம் கொடுத்தால் மாதம் ரூ.55 முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும் என்று தெரிவித்தார். அவரது பேச்சை நம்பி பாவேஷ் கார் ஒன்றை விலைக்கு வாங்கி அதனை சந்தீப்பிடம் கொடுத்தார்.

கைதான சந்தீப்

இதற்காக 100 ரூபாய் முத்திரைத்தாளில் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். கார் வாங்கிச்சென்ற பிறகு சில மாதங்கள் சொன்னபடி பணத்தை சந்தீப் ஆன்லைன் மூலம் போட்டுவிட்டார். அதன் பிறகு பணம் கொடுப்பதை சந்தீப் நிறுத்திவிட்டார்.

அதோடு பாவேஷ் போன் அழைப்புகளை சந்தீப் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் பொறுத்துப்பார்த்துவிட்டு இது குறித்து பாவேஷ் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் சந்தீப் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி அருகில் உள்ள தாபோலி என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது.

அங்கு சென்ற போலீஸார் சந்தீப் மற்றும் அவனது கூட்டாளி சச்சின் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 246 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மோசடி

இது குறித்து வசாய்-விரார் போலீஸ் கமிஷனர் மதுக்கர் பாண்டே கூறுகையில், ''கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி மும்பை, நவிமும்பை, புனே, நாசிக், குஜராத்தில் போலி வாடகை கார் திட்டத்தை செயல்படுத்தி 1375 பேரிடம் 20 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ரூ.25 கோடி மதிப்புள்ள கார் உள்பட 246 வாகனங்கள் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தலைமறைவாக இருக்கும் எஞ்சியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.

ஏற்கெனவே மும்பையில் மக்கள் ஆன்லைன் மோசடியால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாடகை கார் மோசடி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

``பழைய 5 ரூபாய் நோட்டுக்கு ஒரு கோடி..'' ஆசைகாட்டி துப்புரவு தொழிலாளியிடம் ரூ.18 லட்சம் மோசடி

மோசடிகள் புதிது புதிதாக முளைத்துக்கொண்டேதான் இருக்கிறது. மும்பையில் `பழைய 5 ரூபாயை கொடுத்தால் ஒரு கோடி கொடுப்போம்' என்று கூறி மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைக்கு சமூக வலைத... மேலும் பார்க்க

சென்னை: அதிமுக பெண் நிர்வாகிக்கு ஆபாச சைகை; காவலர் மீது வழக்கு பதிவு.. நடந்தது என்ன?

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான 33 வயது பெண் கடந்த 30-ந்தேதி நள்ளிரவு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளைப் பின்தொடர்ந்து வந்தவர், திடீரென ... மேலும் பார்க்க

சென்னை: ஆபாச பதிவு.. பெண்ணுக்கு காதல் டார்ச்சர் கொடுத்த நீச்சல் பயிற்சியாளர் கைது

சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நீச்சல் பயற்சியாளர் பாலாஜி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக நாங்... மேலும் பார்க்க

துபாய் டிராவல்ஸ் அதிபருக்கு கோவையில் ஸ்கெட்ச் - குடும்பத்தோடு சிக்கிய காதலி; பகீர் பின்னணி

திருவாரூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் சிகாமணி (47). சிகாமணிக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவி உள்ளார். சிகாமணி துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இதனிடையே சிகாமணி கடந்த ஏப்ரல் மாதம் கடைசிய... மேலும் பார்க்க

குறிவைக்கப்படும் முதியவர்கள்; மேற்கு மண்டலத்தில் தொடரும் ஆதாயக் கொலைகள்; பின்னணி என்ன?

மேற்கு மண்டலத்தின் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்த இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பாலானவை கிராமப் பகுதிகளாக உள்ளதால், விவசாயிகள் தோட்டத்து வீட்டில் அதி... மேலும் பார்க்க

பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?

மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செ... மேலும் பார்க்க