உ.பி. மாநில மதமாற்ற திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம்...
பள்ளி மதிய உணவில் விழுந்த பாம்பு; சாப்பிட்ட 100 மாணவர்கள் பாதிப்பு! - NHRC விசாரணை, நடந்தது என்ன?
மதிய உணவுத் திட்டம் கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதில் நடைபெறும் தவறுகள் நிறைய குழந்தைகளின் உயிருக்கும், உடல்நலத்துக்கும் ஆபத்து விளைவிக்கும். அரசு திட்டங்களை பாதுகாப்புடன் செயல்படுத்துதல் என்பது அரசின் கடமை.
அதே நேரம், அந்த உணவை தயாரிப்பவர்களின் கவனமும், பொறுப்புணர்வும் அதிஅவசியம். அது தவறும் போது அந்த உணவை நம்பிக்கையோடு உண்ணும் குழந்தைகளின் வாழ்க்கையே கேள்விக்குள்ளாகும்.

அதுபோன்ற ஒரு சம்பவம் பீகார் மாநிலதில் நடந்திருக்கிறது. பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள அரசு பள்ளியில், கடந்த 24-ம் தேதி மத்திய அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, வாந்தி, மயக்கம், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, இந்திய தேசிய மனித உரிமைகள் (NHRC) ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது.
அப்போதுதான், சமையல்காரர் உணவில் விழுந்து இறந்த பாம்பை தூக்கி எறிந்துவிட்டு குழந்தைகளுக்கு உணவை வழங்கியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
இது உறுதி செய்யப்பட்டால், மாணவர்களின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகள் தொடரப்படும்.

இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்குமாறு பீகார் அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.