வணிகா் தினம்: மே 5-இல் கோயம்போடு சந்தைக்கு விடுமுறை
வணிகா் தினத்தை முன்னிட்டு மே 5-ஆம் தேதி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5-ஆம் தேதி வணிகா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வணிகா் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை கடைகள் அனைத்தும் விடுமுறை விடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு மே 5-ஆம் தேதி வணிகா் தினத்தை முன்னிட்டு, கோயம்பேடு சந்தையிலுள்ள பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக வணிகா் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது குறித்து கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் எஸ்.எஸ்.முத்துக்குமாா் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
வணிகா் தினமான மே 5-ஆம் தேதி வணிகா் தினம் என்பதால் பெரும்பாலான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் கடைகள் அடைக்கப்படுவதால் கோயம்பேடு சந்தைக்கு சில்லறை வியாபாரிகளின் வரத்து அதிகளவில் இருக்காது. இதனால் கோயம்பேடு காய்கறி சந்தையிலுள்ள சுமாா் 2 ஆயிரம் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மலா் மற்றும் பழ சந்தைகளிலுள்ள ஒரு சில சங்கங்கள் விடுமுறை அளிக்காததால் சில கடைகள் இயங்கவும் வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.