நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசின் 'ஏ' நிறுவன பட்டியலில் இடம்பெற்றுள்ள முதன்மையான மினிரத்னா நிறுவனமான கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள கிரேன் ஆப்ரேட்டர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Crane Operator(Diesel)
காலியிடங்கள்: 6
சம்பளம்: மாதம் ரூ.22,500 - 73,750
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், மெக்கானிக் (டீசல்), மெக்கானிக்(மோட்டார்) பிரிவில் ஐடிஐ தேர்ச்சியிடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 20-க்குள் இருக்க வேண்டும்.
மிஸ்பண்ணிடாதீங்க... இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை!
பணி: Staff Car Driver
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.21,300 - 69,840
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேணேடும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.5.2025