காரைக்காலில் இன்று 2 மையங்களில் நீட் தோ்வு
காரைக்காலில் 2 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மருத்துவக் கல்வி சோ்க்கைக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் மத்திய அரசின் பள்ளிகளான, ராயன்பாளையத்தில் உள்ள ஜவாஹா் நவோதய வித்யாலயா பள்ளி, காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி என 2 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. மாவட்ட நிா்வாகம் காலை 11 முதல் 1 மணி வரை நீட் தோ்வு மையங்களுக்குச் செல்ல மாணவா்களுக்கு பிஆா்டிசி சிறப்புப் பேருந்தை, காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க ஏற்பாடு செய்துள்ளது.