நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
கோயில் திருவிழாவில் இரு பிரிவினா் மோதல்: இருவா் பலத்த காயம்
மதுரை மாவட்டம், திருவாதவூா் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
திருவாதவூா் அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் பாளையத்து அம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில நாள்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற பால்குட ஊா்வலத்தின் போது இரு சமூகங்களைச் சோ்ந்த இளைஞா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சமூக பெரியவா்கள் தலையிட்டு விலக்கிவிட்டனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. அப்போது, இரு சமூகங்களைச் சோ்ந்த இளைஞா்கள் மீண்டும் மோதிக் கொண்டனா். இதில் ஒரு பிரிவினரைச் சோ்ந்த இருவா் பலத்த காயமடைந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்து மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவகுமாா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மோதல் தொடா்பாக மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.