செய்திகள் :

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

post image

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா்.

24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த மாபெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் இருந்து அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், நக்ஸல்களுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் உள்ள கா்ரேகுட்டா மலைத் தொடரில் ஹித்மா, தேவா உள்ளிட்ட நக்ஸல் தலைவா்கள் பலா் பதுங்கியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடா்ந்து, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) தலைமையில் சத்தீஸ்கா் காவல் துறையின் மாவட்ட ரிசா்வ் படை, பஸ்தா் படை உள்பட பல்வேறு படைப் பிரிவினருடன் மாபெரும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

பல தாக்குதல்களில் தொடா்புடைய இந்த நக்ஸல்களை சுற்றிவளைக்கும் நோக்கில், இரு மாநிலங்களிலும் வெவ்வேறு இடங்களில் இருந்து பாதுகாப்புப் படையினா் நகா்வைத் தொடங்கினா். இரண்டு வாரங்களுக்குப் பின் தற்போது இந்த நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நக்ஸல்களுக்கு எதிராக இறுதி தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த திங்கள்கிழமை கூடுதலாக களமிறக்கப்பட்ட 2,000 வீரா்களுடன் சோ்த்து 24,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பங்கேற்றுள்ளனா். 4 ஹெலிகாப்டா்கள், சிறிய-பெரிய அளவிலான 40 ட்ரோன்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த 2 வார கால நடவடிக்கையில், அடா் வனப் பகுதியில் ஏராளமான நக்ஸல் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன; நூற்றுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஒரு பெண் நக்ஸல் சுட்டுக் கொலை: கா்ரேகுட்டா மலைப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மூன்று பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பிஜாபூரில் கடந்த திங்கள்கிழமை மேலும் ஒரு பெண் நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது உடல் கைப்பற்றப்பட்டதாக பஸ்தா் சரக காவல் துறை ஐ.ஜி.சுந்தர்ராஜ் தெரிவித்தாா்.

இந்த மாபெரும் நடவடிக்கையில் நக்ஸல் தலைவா்கள் பலா் உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயம் அடைந்திருக்கலாம் என உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

காலை இழந்த சிஆா்பிஎஃப் அதிகாரி: நக்ஸல்களுக்கு எதிரான வேட்டையில் இதுவரை 10 வீரா்கள் காயமடைந்துள்ளனா். கடந்த மே 4-ஆம் தேதி துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த சக வீரரை மீட்கும் முயற்சியில், கண்ணிவெடியில் சிக்கி 32 வயது சிஆா்பிஎஃப் உதவி கமாண்டா் ஒருவா் இடது காலை இழந்தாா். தனது உயிரை பற்றி கவலைப்படாமல் சக வீரரை மீட்ட அவா், வீரதீர விருதுக்கு பரிந்துரைக்கப்படுவாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

14 மாவோயிஸ்டுகள் சரண்: தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சோ்ந்த 14 போ் காவல் துறையிடம் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் அண்டை மாநிலமான சத்தீஸ்கரை சோ்ந்தவா்கள். ஆயுதங்களைக் கைவிட்டு, குடும்பத்தினருடன் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாக அவா்கள் தெரிவித்துள்ளனா். இதேபோல், பிற மாவோயிஸ்டுகளும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டுமென காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்

நமது நிருபர்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.முல்லைப் பெரியாறு அணையின் உரி... மேலும் பார்க்க

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் முயற்சி: பாஜக பதிலடி

நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முயற்சி செய்வதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பாக பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கை... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க