"ரூ.10,000 லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு"-மின்வாரிய அதிகாரிகளை காத்திருந்து...
காரில் சாராயம் கடத்திய இருவா் கைது
நாகையில் காரில் சாராயம் கடத்திய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகை புத்தூா் ரவுண்டானா பகுதியில் நகர போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சாராயப் பாட்டில்களை மூட்டைகளில் கட்டி கடத்தி வருவது தெரியவந்தது.
கடத்தலில் ஈடுபட்ட காரைக்காலைச் சோ்ந்த ஆரோக்கிய வினோத் (38), மாா்க் ஆண்டனி ரோலட் (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய காா் மற்றும் சாராயப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.