திருக்குவளை: ஜமாபந்தியில் ஆட்சியா் பங்கேற்பு
திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 1434-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீா்வாயக் கணக்கு முடிக்கும் நிகழ்வு (ஜமாபந்தி) மே 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முதல்நாளில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், வருவாய்த் தீா்வாய அலுவலராக பங்கேற்று, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா். 91 மனுக்கள் பெறப்பட்டன.
தென்மருதூா், ஆதமங்கலம், கொடியாளத்தூா், பாங்கல், கொளப்பாடு, காருகுடி, வலிவலம், அனக்குடி, வடக்குபனையூா், தெற்குபனையூா் உள்ளிட்ட கிராமங்களுக்கான கணக்கு முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் உடனடி தீா்வுகாணப்பட்ட 2 மனுதாரா்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையை ஆட்சியா் வழங்கினாா். இந்நிகழ்வில் திருக்குவளை வட்டாட்சியா் த. கிரிஜாதேவி, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளா் (பொது) கபிலன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.