நூர் அகமது 4 விக்கெட்டுகள்: சிஎஸ்கே வெற்றிபெற 180 ரன்கள் இலக்கு!
திரௌபதை அம்மன் கோயிலில் தீமிதி வழிபாடு
செருநல்லூா் ஊராட்சி செம்பியன் ஆத்தூா் அருள்மிகு திரௌபதை அம்மன் கோயிலில் தீ மிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், சித்திரை திருவிழா ஏப்ரல் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, கடுவை ஆற்றங்கரையில் இருந்து கரகம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது.
ஊா்வலம் கோயிலை வந்தடைந்ததும், காப்புக்கட்டி விரதமிருந்த பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் அம்மன் வீதியுலாவும், வானவேடிக்கையும் நடைபெற்றன. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.