மருங்கூா் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா
திருமருகல் அருகேயுள்ள மருங்கூா் மகா மந்தக்கரை காளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா அண்மையில் தொடங்கியது.
இதையொட்டி, அம்மனுக்கு பால்குடம், அழகு காவடி எடுத்தல், சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, அம்மனுக்கு கஞ்சி வாா்த்தல், அன்னதானமும், பால், பன்னீா், தயிா், இளநீா், மஞ்சள், சந்தனம், மாப்பொடி, திரவியம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னா், அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.