நாடு முழுவதும் 300 விமானங்கள் ரத்து! 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடல்!
Operation Sindoor: "மோடியின் பயணத்தை ரத்து செய்தவர்கள் சுற்றுலாப் பயணிகளைக் காக்கவில்லை" - கார்கே
ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி, பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது, சவுதி சென்றிருந்த பிரதமர் மோடி, உடனடியாக அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார்.
அதேசமயம், உளவுத்துறை தோல்வியால்தான் இவ்வளவு பெரிய உயிரிழப்பு ஏற்பட்டது என மத்திய அரசு மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டை அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசும் ஒப்புக்கொண்டது. தற்போது, தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி தரப்போவதாகப் போர் ஒத்திகை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு முன்பாக மோடியின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை மத்திய அரசு ரத்து செய்ததாகவும், சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியிருக்கிறார்.
ராஞ்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கார்கே, "உளவுத்துறை தோல்வியடைந்ததை அவர்கள் (மத்திய அரசு) ஏற்றுக்கொண்டால், இழந்த உயிர்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
மேலும், அவர்கள் பிரதமரின் வருகையை ரத்து செய்தனர். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்யத் தவறிவிட்டனர்.
அந்தப் பகுதியானது காவல்துறை அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று குற்றம்சாட்டிய அதேவேளையில், "பாகிஸ்தானுக்கு எதிராக அரசாங்கம் வலுவான நடவடிக்கைகளை எடுத்தால் நாங்கள் உடன் நிற்கிறோம்.
இதில் நாங்கள் அரசியலை விரும்பவில்லை. உயிரிழந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நீதியை உறுதி செய்வதற்கான தருணம் இது" என்று கூறினார்.

மறுபக்கம், கார்கேவின் இத்தகையப் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் எதிர்வினையாற்றிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் துஹின் சின்ஹா, "பாதுகாப்பு காரணங்களுக்காகப் பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாகக் கூறுவது ஊகத்தின் உச்சம்.
உளவுத்துறையின் தோல்வியை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 2023-ல் இஸ்ரேலில் நடந்த தாக்குதலாக இருந்தாலும் சரி, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தாக்குதல் சம்பவமாக இருந்தாலும் சரி, இந்திரா காந்தி அல்லது ராஜீவ் காந்தி படுகொலையாக இருந்தாலும் சரி, இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும்போதெல்லாம் பாதுகாப்பு குறைபாடு எப்போதும் இருக்கும்.

இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்க பாதுகாப்பு நிறுவனங்கள் 100 சதவிகிதம் வெற்றிகரமாகச் செயல்பட வேண்டும். ஆனால், தீவிரவாதிகளுக்கு அப்படியில்லை.
ஒருமுறை வெற்றிகரமாக இருந்தாலே போதுமானது" என்று சில நேரங்களில் வாய்ப்புகள் தீவிரவாதிகளுக்குச் சாதகமாக இருக்கும் என்பதைக் குறிப்பிட்டு, "ராணுவ பதிலடிக்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கும்போது கார்கே இவ்வாறு பேசுவது, அற்ப அரசியலுக்கு அவர் அப்பாற்பட்டவர் அல்ல என்பதைக் காட்டுகிறது" என்று சாடினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது 'ஆப்பரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையேயும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs