What to watch on Theatre: நிழற்குடை, கலியுகம், Sarkeet - இந்த வாரம் என்ன பார்க்...
`போர் வேண்டாம்; பாகிஸ்தான் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்' - ஒமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்திருந்தனர்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில்தான் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் இந்த ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பாகிஸ்தான் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் தாக்குதலை நடத்தி இருக்கிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
“நான் போரை ஆதரிப்பவன் இல்லை. எனக்கு போர் வேண்டாம். இந்திய அரசில் உள்ள எவரும் போரை விரும்புவதாக நான் நினைக்கவில்லை.
இங்கு நடந்த ஒரு சம்பவத்திற்கு எதிர்வினையாற்றவே ராணுவம் இதை செய்திருக்கிறது. இது பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கான பதிலடி மட்டுமே என்பதை பாகிஸ்தான் உணர வேண்டிய நேரம் இது. அவர்கள் இதை இன்னும் பெரிய பிரச்னையாக மாற்றாமல் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs