செய்திகள் :

What to watch on Theatre: நிழற்குடை, கலியுகம், Sarkeet - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

post image

நிழற்குடை (தமிழ்)

நிழற்குடை

சிவா ஆறுமுகம் இயக்கத்தில் தேவயானி, விஜித், கண்மனி, நீலிமா ராணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிழற்குடை'. குடும்பத்தில் வேலையில் பிஸியாக இருக்கும் பெற்றோரால் குழந்தைகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இந்த வாரம் மே 9-ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

கலியுகம் (தமிழ்)

கலியுகம்

பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், இனியன், 'ஆடுகளம்' கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கலியுகம்'. இன்னும் 60 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த உலகில் நீர், உணவு, மனிதம் ஏதுமில்லாமல் போனால் என்ன நடக்கும் என்பதுதான் இதன் கதைக்களம். 2064ம் ஆண்டில் நடக்கும் சயின்ஸ் பிக்ஸன் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

கஜானா (தமிழ்)

கஜானா

பிரபதீஷ் இயக்கத்தில் வேதிகா, இனிகோ பிரபாகர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கஜானா'. அட்வண்டர் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

என் காதலே (ஆங்கிலம்)

என் காதலே

ஜெயலக்‌ஷிமி இயக்கத்தில் கபாலி லிங்கேஷ், காட்பாடி ராஜன், திவ்யா தாமஸ், மதுசூதன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'என் காதலே'. வெளிநாட்டுப் பெண், சொந்த ஊர் பெண் இருவரின் காதலில் சிக்கித் தவிக்கும் கடல் பகுதியைச் சேர்ந்த இளைஞனின் முக்கோணக் காதல் கதையான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

அம்பி (தமிழ்)

அம்பி (தமிழ்)

போஸர் ஜே எல்வின் இயக்கத்தில் ரோபோ ஷங்கர், அஷ்வினி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அம்பி. காமெடி, கலாட்டா நிறைந்த இத்திரைப்படம் இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Sarkeet (மலையாளம்)

Sarkeet

தமர் கே வி இயக்கத்தில் ஆசிஃப் அலி, திவ்ய பிரபா, தீபக் பரம்போல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Sarkeet'. வேலை, மன அழுத்தம் இதற்கிடையில் தந்தையாகத் தன் குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் வரும் சிக்கல்கள் என தந்தையின் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Prince and Family (மலையாளம்)

Prince and Family

பிண்டோ ஸ்டீபன் இயக்கத்தில் திலீப், ஶ்ரீனிவாசன், ஜானி ஆண்டனி, மஞ்சு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Prince and Family'. காமெடிகள் நிறைந்த சுவாரஸ்யமான குடும்பத் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Padakkalam (மலையாளம்)

Padakkalam

மனு ஸ்வராஜ் இயக்கத்தில் ஷரஃவுதின், சுராஜ், சந்தீப், நிரஞ்சனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Padakkalam'. தாயக் கட்டை விளையாட்டி வைத்து உருவாகியிருக்கும் சஸ்பன்ஸ், திரில்லர், அமானுஷ்யங்கள் நிறைந்த திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Subham (தெலுங்கு)

Subham

பிரவீன் இயக்கத்தில் ஹர்ஷித், ஶ்ரீனிவாஸ், சரண் பெரி, ஷ்ரேயா, ஷாலினி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Subham'. காமெடி, ஹாரர் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Bhool Chuk Maaf (இந்தி)

Bhool Chuk Maaf

கரண் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், வமிஃவா கஃபி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Bhool Chuk Maaf'. காமெடி, ரொமாண்டிக் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

Shadow Force (ஆங்கிலம்)

Shadow Force

ஜோ கார்னகன் இயக்கத்தில் மார்க் ஸ்ட்ராங், கெர்ரி வாஷிங்டன், டா வைன் ஜாய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Shadow Force'. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது இந்த வாரம் மே 9ம் தேதி (வெள்ளிக் கிழமை) திரையரங்குகளில் வெளியாகிறது.

India - Pakistan: `வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்ட மோடிக்கு எனது பாரட்டுகள்'- ரஜினிகாந்த்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

' என்னுடைய சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் அம்மாதான் இருந்தாங்க'- நெகிழும் மீனா

நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், ... மேலும் பார்க்க

'தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றி இருக்காங்க' -பிரேம்குமாருக்கு THAR பரிசளித்த சூர்யா, கார்த்தி

‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், சூரியாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப்... மேலும் பார்க்க

`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் நடித்த மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு கொடுக்கப்ப... மேலும் பார்க்க

RETRO: ரெட்ரோ வெற்றி; சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப்... மேலும் பார்க்க