வளசரவாக்கத்தில் தீ விபத்து: 2 பேர் பலி
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பங்களா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தம்பதியினர் 2 பேர் பலியாகினர்.
சென்னை வளசரவாக்கம் சௌத்ரி நகரில் ஆடிட்டர் ஸ்ரீராமுக்கு சொந்தமான பங்களா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து அருகில் இருந்தோர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு
தகவலை அடுத்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர பல மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்து காணப்படுகிறது.
இந்த தீ விபத்தில் நடராஜன் மற்றும் அவரது மனைவி தங்கம் உடல் கருகி பலியாகினர். ஸ்ரீராம் மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் முதல் தளத்தில் இருந்து குதித்த பணிப்பெண் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.