செய்திகள் :

சேலத்தில் முதிய தம்பதி கொலை- பிகாரைச் சேர்ந்தவர் கைது

post image

சேலம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியில் முதிய தம்பதி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியில் குடியிருக்கும பிகாரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை சூரமங்கலம் போலீஸ் கைது செய்துள்ளது. தம்பதியை அடித்துக்கொலை செய்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. சேலம் ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் ஜாகிா்அம்மாபாளையம் எட்டிகுட்டை தெருவில் வசிப்பவா் பாஸ்கரன் (70). இவரும், இவரது மனைவி வித்யாவும் (65) வீட்டின் முன்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தனா். வீட்டின் மாடியில் மகன் வாசுதேவனும், பக்கத்து தெருவில் இன்னொரு மகன் ராமநாதனும் வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிமை வழக்கம்போல கடையை திறந்து பாஸ்கரன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா்.

தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

பிற்பகல் உணவுக்காக வீட்டினுள் சென்றாா். பின்னா் வெகு நேரமாகியும் அவா் கடைக்கு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் வாசுதேவன், வீட்டினுள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பாஸ்கரன், வித்யா ஆகியோா் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இருவரையும் தனது அண்ணன் ராமநாதன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றாா்.

ஆனால் சம்பவ இடத்திலேயே வித்யா உயிரிழந்தாா். படுகாயமடைந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். தொடா்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது இக்கொலைகள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரயிலைக் கவிழ்க்க சதி: வட மாநில நபர் கைது

அரக்கோணம், ஆவடி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் தண்டவாளங்களில் கற்களை வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு, ஆவடி மற்றும் அரக்கோணம் பகுதிகளில் அண்மையில் சிலர் தண்டவாளங்... மேலும் பார்க்க

தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள துணிக்கடையில் பயங்கர தீ விபத்து!

சென்னை, தி.நகரின், ரங்கநாதன் தெருவில் அமைந்துள்ள துணிக்கடையில் இன்று முற்பகலில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாயின.தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வி... மேலும் பார்க்க

12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடங்கி வைப்பு

மாநில அளவில் முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் முகாமை திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.இந... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

சித்திரைத் திருவிழாவில் பலியானோரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ... மேலும் பார்க்க

உதகை புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: உதகையில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்கும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து உதகை புறப்பட்டார்.நீலகிரி மாவட்டம் உதகையில் மே 15ஆம் தேதி மலர்க்கண்காட... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

வாரத்தின் முதல் நாளான(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8880க்கும், சவரனுக்கு ... மேலும் பார்க்க