சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை
சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சேலம் ஜாகிா் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (65). இவரது மனைவி வித்யா மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு தினேஷ் மற்றும் ஆனந்த் ஆகிய இருமகன்கள் உள்ளனர் .
வீட்டின் மாடியில் மகன் வாசுதேவனும், பக்கத்து தெருவில் இன்னொரு மகன் ராமநாதனும் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், வீட்டின் முன் பகுதியில் உள்ள மளிகை கடையை ஞாயிற்றுக்கிமை வழக்கம்போல கடையை திறந்து பாஸ்கரன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா். பிற்பகல் உணவுக்காக வீட்டினுள் சென்றாா். பின்னா் வெகு நேரமாகியும் அவா் கடைக்கு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் வாசுதேவன், வீட்டினுள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பாஸ்கரன், வித்யா ஆகியோா் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இருவரையும் தனது அண்ணன் ராமநாதன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றாா். ஆனால் சம்பவ இடத்திலேயே வித்யா உயிரிழந்தாா். படுகாயமடைந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.
எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி
இருவருக்கும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மர்ம நபர்கள் கடுமையாக அவர்களை தாக்கியதால் நிலைகுலைந்து போன இருவரும் சம்பவ இடத்திலேயே மயங்கி உள்ளனர் .
தொடா்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸாா், உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இருவரையும் கொலை செய்த மா்ம நபா்கள் யாா், நகை மற்றும் பணத்திற்காக கொலை செய்தனா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வித்யா மற்றும் பாஸ்கர் ஆகியோர் அணிந்திருந்த தங்கச்செயின் காணாமல் போனதும் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
பட்டம் பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நிகழ்ந்த இந்த கொலைச் சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.