அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! ...
பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்! பெயர்களை வெளியிட்ட இந்தியா!!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பெயரை இந்தியா வெளியிட்டது.
மே 7 ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. முரிட்கே, உள்ளிட்ட இடங்களில் இருந்த ராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், பஞ்சாப் காவல்துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
தற்போது, இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளின் விவரங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹுசைன், மேஜன் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிகேடியர் முகமது ஃபர்கான் மற்றும், பாகிஸ்தான் பஞ்சாப் எம்எல்ஏ உஸ்மான் அன்வர் ஆகியோரும் பங்கேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.