பிடித்தமானவர்களில் ஒருவர் விராட் கோலி.! புகழாரம் சூட்டிய லெப்டினன்ட் ஜெனரல்!
காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!
காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் தொடர்ந்து இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பின. தொடர்ந்து பெய்த கனமழையால் அந்த ஏரியின் கரைகள் உடைந்துள்ளன.
இதனால் கசாபா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுமார் 150 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, படகுகள் மூலம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு மத்தியில் நீரினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற ஆபத்து அதிகரித்து வருவதாகவும் மாகாண அரசு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.