இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு
இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நேரிட்டது.
ஆன்மிகத் தலமான கதிா்காமத்தில் இருந்து குருநாகல் நகா் நோக்கி 75 பயணிகளுடன் மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஒரு வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் 21 போ் உயிரிழந்தனா்.
30-க்கும் மேற்பட்டோா் காயங்களுடன் மீட்கப்பட்டனா். அவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணையமைச்சா் பிரசன்ன குணசேனா தெரிவித்தாா்.