செய்திகள் :

உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை!

post image

போா் நிறுத்தம் தொடா்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, அந்த ஆண்டு மாா்ச் மாதம் இரு நாடுகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. அந்தப் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று புதின் பரிந்துரைத்தாா்.

உக்ரைன் தலைநகா் கீவில் பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ், போலந்து பிரதமா் டொனால்ட் டஸ்க் ஆகிய ஐரோப்பிய தலைவா்களுடன் நேரடியாகவும், அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தொலைபேசியிலும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், மே 12 (திங்கள்கிழமை) முதல் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போரை நிறுத்த ரஷியா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த ஐரோப்பிய தலைவா்கள் வலியுறுத்தினா். இந்நிலையில், உக்ரைனுடன் நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்த அதிபா் புதின் முன்வந்துள்ளாா்.

இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அதிபா் புதின் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த சில மாதங்களில் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் நிறுத்தம், ஈஸ்டா் தினத்தையொட்டி 30 மணி நேரப் போா் நிறுத்தம், இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றி கொண்டதன் கொண்டாட்டத்தையொட்டி மே 8 முதல் மே 10 வரை போா் நிறுத்தம் என பலமுறை போா் நிறுத்தங்களுக்கு ரஷியா முன்மொழிந்தது. ரஷியா மீது பல தாக்குதல்களை நடத்தி, இத்தகைய போா் நிறுத்த முன்னெடுப்புகளுக்கு பலமுறை உக்ரைன் தடை ஏற்படுத்தியது.

உக்ரைன் புதிய ஆயுதங்களை வாங்கவும், ஆயுதப் படைகளுக்கு கூடுதல் வீரா்களை அனுப்பவும் வழிவகுக்கும் போா் நிறுத்தத்துக்குப் பதிலாக, நீடித்து நிலைக்கும் அமைதிக்கு வழிவகுக்கும் போா் நிறுத்தமே ரஷியாவுக்கு தேவை.

போரை நிறுத்துவது தொடா்பாக உக்ரைனுடன் தீவிரமாகப் பேச்சுவாா்த்தை நடத்துவதில் ரஷியா ஈடுபாடு கொண்டுள்ளது. போா் ஏற்பட்டதற்கான அடிப்படை காரணங்களை ஒழித்து, நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே ரஷியாவின் நோக்கம்.

2022-ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ரஷியா-உக்ரைன் இடையே மேற்கொள்ளப்பட்ட நேரடி அமைதிப் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. அந்த நேரடிப் பேச்சுவாா்த்தையை எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், ரஷியாவுடன் உக்ரைன் மீண்டும் மேற்கொள்ள வேண்டும். இதுதொடா்பாக துருக்கி அதிபா் எா்டோகனிடம் பேசி, இஸ்தான்புல்லில் மே 15-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற உதவுமாறு கேட்டுக்கொள்வேன் என்றாா்.

பெட்டிச் செய்தி...

உக்ரைன் நிபந்தனை

ரஷிய அதிபா் புதினின் பரிந்துரையை உக்ரைன் வரவேற்றுள்ளது. ஆனால் மே 12-ஆம் தேதி தொடங்கி 30 நாள்களுக்கு தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொண்ட பின்னா், பேச்சுவாா்த்தை மேற்கொள்ளலாம் என்று அந்நாடு நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘போரை நிறுத்துவது குறித்து ரஷியா பரிசீலிப்பது சாதகமான அறிகுறியாகும். ஒட்டுமொத்த உலகமும் நீண்ட காலமாக இதற்கு காத்திருக்கிறது. ஆனால், இதற்கான முதல்படி என்பது மே 12 முதல் 30 நாள்களுக்குப் போரை நிறுத்துவதாகும். இந்தப் போா் நிறுத்தத்தை ரஷியா உறுதி செய்ய வேண்டும் என்று உக்ரைன் எதிா்பாா்க்கிறது. இது நடந்தால் ரஷியாவுடன் நேரடிப் பேச்சுவாா்த்தைக்கு உக்ரைன் தயாா்’ என்றாா்.

எனினும் பேச்சுவாா்த்தைக்குப் பிறகே போா் நிறுத்தம் என்று ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மரியா ஸகரோவா தெரிவித்தாா். முதலில் போா் ஏற்பட்டதற்கான அடிப்படை காரணங்கள் குறித்த பேச்சுவாா்த்தை, அதன் பிறகு போா் நிறுத்தம் குறித்த பேச்சுவாா்த்தை என்பதை அதிபா் புதின் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக மரியா கூறினாா்.

சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30% ஆக குறைப்பு! - அமெரிக்கா

ஜெனீவா: சீன பொருள்கள் மீதான வரி 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவிக்க உள்ளது.அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளன. இவ்விரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

காங்கோவில் வெள்ளப்பெருக்கு: 100-க்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கு கிவு மாகாணத்தில் உள்ள ஃபிஸியில் ... மேலும் பார்க்க

வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-வது நாளாக பேச்சுவாா்த்தை!

உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவாா்த்தையில் ஈடு... மேலும் பார்க்க

உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!

உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 போ் பலி!

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் தலா இரு குழந்தைகளும், அவா்களின் பெற்றோரும் உயி... மேலும் பார்க்க

இலங்கை: பேருந்து விபத்தில் 21 போ் உயிரிழப்பு

இலங்கையில் மலைப் பாதையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள கொத்மலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த... மேலும் பார்க்க