டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை
இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
இது குறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டது.
உலகளாவிய தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி
பல்வேறு தொலைத்தொடர்பு சேவை நிறுவன ஆபரேட்டர்களின் விற்பனை மையங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடைய ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
சோதனையின்போது கைப்பேசிகள், மின்னணு சாதனங்கள், கேஒய்சி ஆவணங்களின் நகல்கள் மற்றும் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அங்கீகரிக்கப்படாத சிம் கார்டுகளை விநியோகிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர்கள் உள்பட தனிநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட அசையும் சொத்துக்கள் விவரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.