``கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' - பாமக மாநாட்டில் ராமத...
ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையை குளிர்விக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் போலவே இன்றும்(மே 11) மழை பொழிந்தது. பகல் 12 மணிக்குப் பின் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு காணப்பட்டது.
முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி மாலை 3 மணிக்குப் பின் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சென்னையில் ஜில் காற்றுடன் குளிர் சீதோஷ்ணம் நிலவியது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கிய காட்சிகளையும் காண முடிந்தது.
இந்தநிலையில், இன்றும் சென்னையில் பெய்துள்ள பலத்த மழையால் வெப்பம் தணிந்தது. காலையில் வெய்யில் சுட்டெரித்த நிலையில், திடீரென மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று விடுமுறை நாளாக இருப்பதால், மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையவில்லை.
இதே பாணியில், அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.