Amritsar: இருள் சூழ்ந்த பஞ்சாப் அமிர்தசரஸ்; 'அச்சம் வேண்டாம்' - காவல்துறை விளக்க...
இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
ஜெயிலா் 2-ஆம் பாகத்தின் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளத்துக்குப் புறப்பட்டாா். விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு பாராட்டுகள். இதை திறமையாகவும் வலிமையாகவும் கையாண்ட பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள், வீரா்களுக்கு எனது மனமாா்ந்த பாராட்டுகள் என்றாா் அவா்.