செய்திகள் :

``கூட்டணி பற்றி நான் முடிவுசெய்வேன்; நீங்கள் ஒழுங்காக..'' - பாமக மாநாட்டில் ராமதாஸ் பேசியதென்ன?

post image

பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (மே 11) நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் கிரிமிலேயர் முறையை நீக்க வேண்டும், தனியார்துறையில் இட ஒதுக்கீடு என மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாமக சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு
பாமக சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு

தொடர்ந்து மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்குப் போராட்டம் அறிவிக்கப்படும். இதுவரை நடந்திராத போராட்டமாக அது இருக்கும். 50 ஆண்டுகளாக உங்களுக்காக உழைத்து வருகிறேன். நாமும் ஒருமுறை இந்தத் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு என்னுடைய பேச்சைக் கேளுங்கள். நான் ஆளப்போவதில்லை, எனக்கு அந்த ஆசையுமில்லை. அந்த ஆசை இருந்திருந்தால், கவர்னராக இருந்திருப்பேன், பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன், தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். ஆனால், அந்த ஆசை எனக்கு இல்லாமல் போய்விட்டது. உங்களுக்காக வாழ்கிறேன்.

`இந்த ஊமை ஜனங்களுக்காக உங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள். 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டைக் கொடுங்கள்' என்று தம்பி ஸ்டாலினிடம் வாதாடியிருக்கிறேன். நமக்குத் தேவையெல்லாம் உங்களின் ஒரு ஓட்டுதான். இவ்வளவு நாள் என்னுடைய பேச்சைக் கேட்டீர்கள், இடையில் மறந்தீர்கள். அன்று தனியாக 4 தொகுதிகளில் வென்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றிபெற்றோம். இது நமக்கு அசிங்கமா இல்லையா? நம்ம ஆளுங்க நமக்கே ஒட்டு போடல.

ராமதாஸ் - பாமக
ராமதாஸ் - பாமக

இனி அப்படி அப்படிச் செய்யக் கூடாது. அப்படி இருந்தீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொருவரின் கணக்கையும் முடித்துவிடுவேன். அப்படியென்றால் உங்களின் பொறுப்புகள் உங்களிடம் இருக்காது. எம்.எல்.ஏ என்றெல்லாம் பார்க்க மாட்டேன், கடலில் வீசிவிடுவேன். சில பேர் கூட்டணி எங்கு என்று கேட்கிறார்கள். கூட்டணி பற்றிப் பேசுவதற்கு நான் இருக்கிறேன். நான் முடிவு செய்வேன். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு 87 வயது. கிழவனுக்கு வயசாகிடுச்சுனு ஏமாற்றப்பார்க்காதீர்கள். ஒழுங்காகக் கட்சியைப் பலப்படுத்துங்கள். என்னால் உழைக்க முடியாது என்பவர்கள் சொல்லுங்கள், வேறு ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கிறேன். " என்று கூறினார்.

`மத்திய அரசின் முகமாக இருந்தது தவறா?' - விக்ரம் மிஸ்ரி எதிர்கொள்ளும் ட்ரோல்கள்!

விக்ரம் மிஸ்ரி - கடந்த சில நாள்களாக நாம் அதிகம் கேட்கும் பெயர்... அதிகம் பார்க்கும் முகம்!பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து இந்திய அரசின் முகமாக இருந்து வருபவர் வெளியுறவு செயலாளர் விக்ரம... மேலும் பார்க்க

Kashmir: ``தீவிரவாத தாக்குதலால் எல்லாம் மாறிவிட்டது..'' - முதலமைச்சர் ஒமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, என்.டி.டி.வி தளத்துக்கு அளித்தப் பேட்டியில், பஹல்காம் தாக்குதலால் அடைந்த இழப்பு குறித்து பேசியுள்ளார். அந்தத் தீவிரவாத தாக்குதல் ஒரேநாளில், பொருளாதார ரீதியாக... மேலும் பார்க்க

``இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்..'' - ஜெனரல் ராஜீவ் காய்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது 'ஆபரேஷன் சிந்தூர்'.அதன் பின்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மிகவும் அதிகரித்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதிக் க... மேலும் பார்க்க

``இனி போர் வேண்டாம்..'' - உக்ரைன், காஸா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து புதிய போப் பேசியதென்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுப்பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக, மே 7-ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பா... மேலும் பார்க்க

Doctor Vikatan: வாழைப்பழம் சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் மலச்சிக்கல்; தினம் சாப்பிடுவது சரியா?

Doctor Vikatan: பல வருட காலமாக நான் தினமும் இரவில் சாப்பாட்டுக்குப் பிறகு வாழைப்பழம் எடுத்துக்கொள்கிறேன். என்றாவது ஒன்றிரண்டு நாள்கள்அது மிஸ் ஆனாலும் அடுத்த நாள் காலைக்கடனைக் கழிப்பதில் சிரமம் ஏற்படுக... மேலும் பார்க்க

Pakistan: ``இனி தாக்குதல் நடத்தினால்..'' - எச்சரித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பேரழிவைச் சந்திக்கும் என பிரதமர் மோடி கூறியதா... மேலும் பார்க்க