``இனி போர் வேண்டாம்..'' - உக்ரைன், காஸா, இந்தியா, பாகிஸ்தான் குறித்து புதிய போப்...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நில நடுக்கம் ஏற்பட்டது. 89 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த அது ரிக்டா் அளவுகோலில் 6.0அலகுகளாகப் பதிவானது என்று தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்!
மேலும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்தோனேசியா, புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது.
இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்தோனேசியா அருகே 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுமாா் 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.