செய்திகள் :

'தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றி இருக்காங்க' -பிரேம்குமாருக்கு THAR பரிசளித்த சூர்யா, கார்த்தி

post image

‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில், சூரியாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘மெய்யழகன்’.

இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரேம்குமார் ‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார்.

மெய்யழகன்
மெய்யழகன்

இந்நிலையில் இயக்குநர் பிரேம்குமாரின் கனவு வாகனமான வெள்ளை நிற மஹேந்திரா தார் ( THAR) காரை சூர்யாவும், கார்த்தியும் பரிசாக வழங்கி இருக்கின்றனர்.

இதுகுறித்து பிரேம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில் “மஹிந்திரா தார் எனக்கு எப்போதும் ஒரு கனவு வாகனமாக இருந்தது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் தார் ராக்ஸ் AX 5L 4x4 வேரியண்ட்டை நான் விரும்பினேன்.

ஒரு கட்டத்தில் சூழ்நிலைகள் மாறி, தேவைகள் அதிகரித்தபோது, ​​தார் ராக்ஸிற்காக நான் சேமித்ததை செலவிட வேண்டியிருந்தது. கனவு வெகுதூரம் நகர்ந்தது.

பிரேம்குமார்
பிரேம்குமார்

நேற்று முன்தினம் சூர்யா அண்ணன் எனக்கு ஒரு வெள்ளை தார் ராக்ஸ் AX5L 4x4-ன் புகைப்படத்தை அனுப்பினார், அதில் 'வந்துவிட்டது' என்ற குறுஞ்செய்தியும் இருந்தது. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

லட்சுமி இல்லத்துக்கு அழைக்கப்பட்டேன். கதவுகள் திறந்ததும், என்னுடன் நீண்ட பயணத்தைத் தொடங்க ஒரு கம்பீரமான வெள்ளை தார் ராக்ஸ் AX 5L 4x4 காரும் காத்திருந்தது தெரிந்தது.

அதன் அருகில் என் அன்பான மெய்யழகன் கார்த்தி நின்று கொண்டிருந்தார், அவர் என் கனவுகளைத் திறக்க சாவியை ஒப்படைத்தார்.

நான் முற்றிலும் நம்ப முடியாமல் நின்றேன். நாங்கள் ஒரு சிறிய ரைட் சென்றோம். பின்னர் நான் தார் காரை என் அலுவலகத்திற்குக் கொண்டு வந்தேன்.

இரண்டு நாட்கள்தான் ஆகிறது, ஆனாலும் நான் குறைந்தது 50 கி.மீ. ஓட்டிவிட்டேன். இதை இன்னும் ஒரு கனவு போல உணர்கிறேன்.

இதை எனக்குத் தரப்பட்ட ஒரு பரிசாக நான் பார்க்கவில்லை. ஒரு தம்பியின் கனவை அண்ணன்கள் நிறைவேற்றியதாகப் பார்க்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

'தோனியை ரொம்ப பிடிக்கும், அவரால்தான்...' - தோனி குறித்து நெகிழும் மீனாட்சி சௌத்ரி

நடிகை மீனாட்சி சௌத்ரி தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கிறார்.‘தி கோட்’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்களின் மூலம் திரையுலகில் கவனம் பெற்றவர... மேலும் பார்க்க

India - Pakistan: `வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்ட மோடிக்கு எனது பாரட்டுகள்'- ரஜினிகாந்த்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

' என்னுடைய சிறந்த தருணங்கள் எல்லாவற்றுக்கு பின்னாலும் அம்மாதான் இருந்தாங்க'- நெகிழும் மீனா

நடிகை மீனா அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது அம்மாவிற்கு வாழ்த்து தெரிவித்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றரைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மக்கள் இந்த சினிமா மூலமான ஈர்ப்பையும், ... மேலும் பார்க்க

`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்ட் பேமிலி இயக்குநர்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பல... மேலும் பார்க்க

நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் நடித்த மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு கொடுக்கப்ப... மேலும் பார்க்க

RETRO: ரெட்ரோ வெற்றி; சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப்... மேலும் பார்க்க