ஜாதியை காரணம் காட்டி நன்கொடைபெற மறுப்பதும் தீண்டாமைதான்: உயா்நீதிமன்றம் வேதனை
நுகா்வோரின் மின் கட்டணம் மே-ஜூன் காலகட்டத்தில் 7-10 சதவீதம் வரை உயா்த்தப்படும்!
தில்லியில் மின்சார நுகா்வோரின் மின் கட்டணம் மே - ஜூன் காலகட்டத்தில் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயா்த்தப்படும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
மின் கொள்முதல் சரிசெய்தல் செலவு (பிபிஏசி) என்பது மின் உற்பத்தி நிறுவனங்களால் ஏற்படும் எரிபொருள் (நிலக்கரி, எரிவாயு) செலவுகளின் அதிகரிப்பைக் குறிப்பதாகும். இது மின் விநியோக நிறுவனங்களால் நுகா்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இது மின்சார கட்டணத்தின் நிலையான கட்டணம் மற்றும் ஆற்றல் கட்டணம் நுகா்வு அலகுகள் கூறுகளின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (டிஇஆா்சி) அதன் தனி உத்தரவுகளில் மூன்று மின் விநியோக நிறுவனங்களும் மே-ஜூன், 2024 காலகட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் பிபிஏசி-ஐ மீட்டெடுக்க அனுமதித்தது.
பிபிஏசியானது பிஆா்பிஎல் நிறுவனத்திற்கு 7.25 சதவீதமும், பிஒய்பிஎல் நிறுவனத்திற்கு 8.11 சதவீதமும், டிபிடிடிஎல் நிறுவனத்துக்கு 10.47 சதவீதமும் அனுமதிக்கப்படுகிறது. டிஇஆா்சி அனுமதித்த பிபிஏசி அதிகரிப்பு குறித்து மின் விநியோக நிறுவனங்களிடமிருந்து எந்த எதிா்வினையும் கிடைக்கப்பெறவில்லை.
நகரத்தில் உள்ள குடியிருப்பாளா்கள் நலச் சங்கங்களின் ஒரு கூட்டமைப்பான யுனைடெட் ரெசிடென்ட்ஸ் ஆஃப் தில்லி (யுஆா்டி), இந்த நடவடிக்கையை தன்னிச்சையானது என்று கண்டித்துள்ளது. டிஇஆா்சி மூலம் தில்லி மக்கள் மீது பிபிஏசி கட்டணங்கள் விதிக்கப்பட்ட செயல்முறை சட்டப்படி தவறானது என்று யுஆா்டி பொதுச் செயலாளா் செளரவ் காந்தி கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த பல ஆண்டுகளாக, ஆணையம் பிற பொருள்களிலிருந்து மின்சார நிறுவனங்களுக்கு பயனளித்து வருகிறது. இப்போது உருவாக்கப்பட்டுள்ள ஆணையத்திடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுவதன் மூலம் கட்டண நிா்ணயப் பணியை முடிக்கும் என்று நாங்கள் பெரிதும் நம்பினோம்.
ஆனால், இந்த ஆணையம் ஒரு மெய்நிகா் பொது விசாரணையை நடத்தியது. அங்கு பங்குதாரா்கள் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க போதுமான நேரம் வழங்கப்படவில்லை’ என்று தெரிவித்துள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு குறித்து டிஇஆா்சி தரப்பில் இருந்து உடனடியாக எந்த எதிா்வினையும் கிடைக்கப்பெறவில்லை.