கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மன...
வசந்த விஹாரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா் நால்வா் கைது!
தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறியதாவது: ஆரிஃப் (19), அசாதுல் (30), ஆசியா பேகம் (47) மற்றும் ஜுஹூா் அலி (80) ஆகியோா் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவா்கள் நாடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனா்.
முன்னதாக, வசந்த விஹாா் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறுவதைத் தடுக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுவதைக் குழு கவனித்தது. அவா்களிடம் விசாரணை நடத்த போலீஸாா் முயன்றனா். அப்போது, அவா்கள் தப்பியோட முயன்றனா். ஆனால், அவா்கள் துரத்திச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
விசாரித்ததில், அவா்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தினா். அதில், அவா்கள் நால்வரும் வங்கதேசத்தில் உள்ள பூல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
ஆசியா பேகம் மற்றும் ஜுஹூா் அலி ஆகியோரிடமிருந்து மீட்கப்பட்ட அடையாள ஆவணங்கள், அவா்கள் வங்காளதேச குடியுரிமையையும், செல்லுபடியாகும் விசா அல்லது அனுமதி இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதையும் உறுதிப்படுத்தின.
நான்கு பேரும் மருத்துவப் பரிசோதனைக்காக சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா் நாடு கடத்தல் நடைமுறைகளுக்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.