செய்திகள் :

நடிகர் சூப்பர் குட் ஃபிலிம் சுப்ரமணி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்!

post image

30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் நடித்த மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக கையாளும் திறமை கொண்ட இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.

சூப்பர் குட் சுப்ரமணி

இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்தார். அவரின் சிகிச்சைக்காகவும், குடும்பத்தின் செலவுக்காகவும் நடிகர், நடிகைகள், திரைப்பட சங்கம் மற்றும் நண்பர்கள் உதவி வந்தனர். கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 58.

மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு மனைவி மற்றும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள். இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும் என்றும் நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.

RETRO: ரெட்ரோ வெற்றி; சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப்... மேலும் பார்க்க

Simran: "ஒரு பிரபலமாக வாழ்வது எளிதான விஷயமல்ல; காரணம்.." - குழந்தைகள் பற்றி கேள்விக்கு சிம்ரன் பதில்

சசிக்குமார், சிம்ரன் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திலும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார் சிம... மேலும் பார்க்க

Retro நாயகிகள் 03 : `கணவர்கிட்ட இருந்து தப்பிக்க வீட்டை சுத்தி ஓடியிருக்கேன்' - நடிகை ரதி பர்சன்ல்ஸ்

தமிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவ... மேலும் பார்க்க

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாகும் லோகேஷ் கனகராஜ்? உண்மை என்ன?

'ராக்கி', 'சாணிக் காயிதம்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், அடுத்து லோகேஷுடன் கைகோர்க்கிறார் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் ஒலிக்கிறது.ஆங்கில வெப்சீரீஸான Grotesquerie பாணியில் அ... மேலும் பார்க்க

Devayani: ``நானும் ராஜகுமாரன் சாரும் எங்க குழந்தைகளை மாத்தி மாத்தி பார்த்துக்குறோம்!'' - தேவயானி

தேவயானி நடிப்பில் உருவாகியிருக்கிற 'நிழற்குடை' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 2018-க்குப் பிறகு தேவயானி நடிக்கும் தமிழ் திரைப்படம் இது. இப்படத்தில் தேவையாணி ஈழ தமிழராக நடித்திரு... மேலும் பார்க்க

Simran: `30 வருட கரியரில் இதுதான் சிறந்த தருணம்; அஜித், விஜய்க்கு என்னுடைய..'- நெகிழும் சிம்ரன்

சிம்ரன் சமீபத்தில் வெளியான ‘அஜித்தின் குட் பேட் அக்லி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சசிகுமாருக்கு ஜோடியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் நடித்திருந்தார். கடந்த மே1 ஆம் த... மேலும் பார்க்க