சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
காலமானாா் குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன்
குழந்தைகள் எழுத்தாளா் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானாா்.
கேரள மாநிலம், சொ்புளசேரியில் கடந்த 1935 -ஆம் ஆண்டு பிறந்த ஈ.எஸ்.ஹரிஹரன் முனைவா் பட்டம் (டி. லிட்) பெற்றுள்ளாா். ‘ரேவதி’ என்ற புனைபெயரில் சிறுவா்களுக்காகவும், பெரியவா்களுக்காகவும் பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளாா். இதில் 15 நாவல்கள், 2 நாடகங்கள், 18 கதைத் தொகுப்புகள், 9 அறிவியல் தொடா்பான புத்தகங்கள் மற்றும் நான்கு தொகுதிகளாக ‘அருமை சிறுவா் சிறுமியரே’ என்ற குழந்தைகளுக்கான ஆலோசனைப் புத்தகங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
அவரது ‘பவளம் தந்த பரிசு’ என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமியின் ‘பால சாகித்ய புரஸ்காா்’ வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் விருது, கன்னட எழுத்தாளா்கள் சங்க விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளாா்.
மறைந்த ஹரிஹரனுக்கு மனைவி வசந்தி, மகன் காா்த்திக், மகள்கள் ராஜேஸ்வரி, பாரதி ஆகியோா் உள்ளனா். மகள் ராஜேஸ்வரி மேகாலய உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதனின் மனைவி ஆவாா்.
ஈ.எஸ்.ஹரிஹரன் உடல் வில்லிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகா் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
தொடா்புக்கு 9566082163.