6,144 சுகாதார மையங்களில் தடையின்றி தடுப்பூசி: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
RETRO: ரெட்ரோ வெற்றி; சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர்.
சந்தோஷ் நாரயணின் இசையில் 'love laughter war' காதலும், கோபமுமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று (மே 7) கேக் வெட்டிக் கொண்டாடியிருந்தனர்.

இந்த வெற்றியை அடுத்து `ரெட்ரோ' படத்தின் லாபத்திலிருந்து அகரம் பவுண்டேஷனுக்கு ரூ.10 கோடி வழங்கியிருந்தார் சூர்யா. சூர்யாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்.
இது தொடர்பாக விநியோகஸ்தர் சக்தி வேலன் குறிப்பிடுகையில், ''ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இத்திரைப்படம், இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்த திரைப்படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.
இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது.




இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு 'கடைகுட்டி சிங்கம்' வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் 'விருமன்' வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.'' என்றார்.