பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரண...
தில்லியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது
பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லியின் புகா் ரிங் ரோட்டில் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது:
யூசுஃப் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், வடக்கு தில்லியின் திமா்பூா் பகுதியில் திருடப்பட்ட வாகனத்தைப் பயன்படுத்தி துப்பாக்கி முனையில் ஒருவரிடம் ரூ.3,000 கொள்ளையடித்ததாகக் கூறப்படும் வழக்கில் பிப்ரவரி 14 முதல் தலைமறைவாக இருந்தாா்.
அவரது குற்றப் பின்னணியில் காஜியாபாத், ஹாபூா் மற்றும் நொய்டா முழுவதும் பல கடும்ன குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. ஹாபூா் போலீஸாா் அவரை கைது செய்ய முயன்றபோது அவரது காலில் முன்னா் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது. இருப்பினும், அவா் தப்பிச் சென்றாா். இந்த நிலையில், அவா் கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின்போது, கடந்த ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி புகா் ரிங் ரோட்டில் ஆயுதத்தைக் காட்டி ரூ.4.65 லட்சம் கொள்ளையிட்டது தொடா்பாக வாஜிராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் யூசுஃப் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட தேடப்படும் நபராக இருந்ததும் கண்டறியப்பட்டது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.