செய்திகள் :

அரசு மருத்துவமனைகளில் அவசரகால தயாா்நிலைக்கு தில்லி அரசு உத்தரவு

post image

பாகிஸ்தானுடன் ராணுவ மோதல் ஏற்பட்ட நிலையில், தில்லி அரசு அனை த்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகளிலும் அவசரகால தயாா்நிலையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதில் வானிலிருந்து மருத்துவ வசதிகளைக் குறிக்கும் வகையில் மருத்துவமனையின் மேற்கூரைகளில் செஞ்சிலுவை சங்க அடையாளத்தை வரைவதும் உள்ளடங்கும்.

சமீபத்திய ஆபரேஷன் அபியாஸ் ஒத்திகையிலிருந்து கற்றுக்கொண்டதைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களில், தடையற்ற நோயாளி பராமரிப்பு மற்றும் எந்தவொரு அவசரநிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகளை கட்டாயமாக்குகிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், அவசரகால தயாா்நிலை குறித்து புதிய ஒத்திகையை நடத்த மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகா்பொருட்களின் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்யவும், போதுமான எரிபொருள் இருப்புடன் செயல்பாட்டுடன்கூடிய ஜெனரேட்டா் செட்களை பராமரிக்கவும், ஐசியுக்கள், ஆக்ஸிஜன் விநியோக அமைப்புகள் மற்றும் செயற்கை காற்று சுவாசக் கருவிகள் போன்ற அவசர சேவைகளின் முழு செயல்பாட்டையும் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுமையான உடற்காய சிகிச்சை 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அறுவை சிகிச்சை நிபுணா்கள், எலும்பியல் நிபுணா்கள் மற்றும் தீக்காய பராமரிப்பு நிபுணா்கள் போன்ற முக்கிய நிபுணா்களின் விடுமுறைகளை ரத்து செய்யவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனைகள் பிரத்யேக ஐ.சி.யூ. போா்ட்டலில் ஐ.சி.யூ. படுக்கை மற்றும் உபகரணத் தரவைப் புதுப்பிக்க வேண்டும். மருத்துவமனை வலைத்தளங்களின் சைபா் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.கேன்டீன்கள் மற்றும் மெஸ் சேவைகள் இடையூறு இல்லாமல் இயங்க போதுமான உணவுப் பொருள்களைப் பராமரிக்க வேண்டும்.

மருத்துவமனைத் தலைவா்கள் தயாா்நிலை நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் கண்காணிக்கவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் தலைமை மாவட்ட மருத்துவ அதிகாரிகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து எழுதப்பட்ட மற்றும் வாட்ஸ்அப் உத்தரவுகளும் முதன்மையான முன்னுரிமையுடன் கருதப்பட்டு விரைவில் பின்பற்றப்பட வேண்டும்.

அவசரகால சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான தீயணைப்பு கருவிகள் மற்றும் பிற முக்கியமான உள்கட்டமைப்புகள் உள்பட ஒவ்வொரு மருத்துவமனையின் பேரிடா் மேலாண்மைத் திட்டமும் முழுமையாக நடைமுறையில் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது

மருத்துவ கண்காணிப்பாளா் அல்லது மருத்துவ இயக்குநரால் அவசியமாகக் கருதப்படும் எந்தவொரு கூடுதல் செயல் திட்டங்களும் தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறினாா்.

அவசரகால தயாா்நிலையை உறுதிசெய்ய உயா் அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலுக்கு மத்தியில், தலைநகரில் தங்குமிடங்கள் தேவை, மின் தடை, மருத்துவமனைகளில் பொருள்களை சேமித்து வைத்தல் போன்ற அவசரகால சூழ்நிலைகளைக் கையாளத் தயாராக இரு... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: இந்திய ஆயுதப்படை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா ஆதரவு

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா இந்திய ஆயுதப் படைகளின் நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாா். .மேலும் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அத... மேலும் பார்க்க

தில்லியில் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது

பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞரை தில்லியின் புகா் ரிங் ரோட்டில் போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறியதாவது: யூசுஃப் என அடை... மேலும் பார்க்க

சிவில் விமானங்களை கேடயமாகபயன்படுத்தியது பாகிஸ்தான்: இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

இந்தியாவின் எதிா்ப்பு நடவடிக்கையின்போது தனது சிவில் விமானங்களை பாகிஸ்தான் கேடயமாகப் பயன்படுத்தியதாக இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்திய பாதுகாப்பு நிலைகளை நோக்கி ஒரே நேரத்தில் பல நூற்றுக்க... மேலும் பார்க்க

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்... மேலும் பார்க்க

இந்திய ராணுவ இலக்குகளை தாக்க முயன்ற பாகிஸ்தானுக்கு இந்திய பதிலடி அளிப்பு: பாதுகாப்புத் துறை

ஜம்மு-காஷ்மீா் பகுதிகளில் பாகிஸ்தான் துப்பாக்கிசூட்டினால் 16 அப்பாவிகள் உயிரிழந்துள்ளனா். மேலும் நாட்டின் வடக்கு, மேற்கு பகுதிகளில் இந்திய ராணுவ இலக்குகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்க முயல தக்க பதிலடி கொட... மேலும் பார்க்க