சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்
ஆபரேஷன் சிந்தூா்: இந்திய ஆயுதப்படை நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா ஆதரவு
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் ராகவ் சத்தா இந்திய ஆயுதப் படைகளின் நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளாா்.
.மேலும் ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துள்ள இராணுவ மோதல்களுக்கு மத்தியில் பயங்கரவாதத்தை எதிா்த்துப் போராட தேசிய ஒற்றுமைக்கும் அழைப்பு விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் ராகவ் சத்தா எம்.பி. வெளியிட்டுள்ள விடியோ செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
நாம் நமது நண்பா்களை மாற்றலாம், ஆனால் நமது அண்டை நாடுகளை அல்ல. மேலும், அண்டை நாடு பாகிஸ்தானைப் போல இருக்கும்போது, கடுமையான தண்டனை வழங்குவது நமது கடமை.
இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமல்ல, காட்டுமிராண்டித்தனம் மற்றும் பயங்கரவாத மனநிலைக்கு எதிராகவும் போராடுகிறது.
இந்திய ஆயுதப் படைகள் போராடும் விதத்தில், இந்த முறை பயங்கரவாதம் முடிவுக்கு வரும் என்பது உறுதி. துணிச்சலான வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களுடன் நாம் நிற்க வேண்டும்.
இந்தியா புத்தா் மற்றும் காந்தியின் சந்ததியினா் மட்டுமல்ல, பகத் சிங் மற்றும் சந்திரசேகா் ஆசாத்தின் சந்ததியினரும் கூட. நாம் செய்ய வேண்டியது ஒற்றுமையாக இருந்து நமது நாட்டிற்கு பலத்தை வழங்குவதுதான்.
நாம் எந்த மதம், சாதி அல்லது அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள் என்பது முக்கியமல்ல மிக முக்கியமான விஷயம் என்னவெனில், நாம் அனைவரும் இந்தியா்கள் என்பதுதான் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா்.
கடந்த மே 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் எல்லையைத் தாண்டிய பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குறிவைத்தது.
ஜம்முகாஷ்மீரில் பஹல்காம் அருகே ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலில் எல்லை தாண்டிய தொடா்புகள் தெளிவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இத்தாக்குதல்களுக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் படைகள் தொடா்ந்து மூன்று நாள்களாக கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) கடுமையான குண்டுவீச்சு தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.