திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
தென்காசி மாவட்டம் மேலகரம், நன்னகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் திமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜிபி.ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் கிருஷ்ணராஜா, துணை அமைப்பாளா்கள் அப்துல் ரஹீம், சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.