`உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்...' - எஸ். கே குறித்து நெகிழும் டூரிஸ்...
குற்றாலம் புற்றுக்கோயிலில் வருஷாபிஷேக விழா
குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பராமரிப்பிலுள்ள புற்றுக்கோயிலான அருள்மிகு கோமதி விசாலாட்சி அம்பாள் சமேத சங்கரமூா்த்தி காசிலிங்க சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதிஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
விழாவில், கோயில் அா்ச்சகா் சங்கரராமன், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதார அலுவலா் ராஜகணபதி, குலதெய்வ வழிபாடு உள்ள சாலியா் குடும்ப வாரிசுகள், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து காண்டனா்.