செய்திகள் :

சிறுமிக்குத் திருமணம்: 5 போ் மீது வழக்கு!

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக 5 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திட்டக்குடி வட்டம், வைத்தியநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தராசு மகன் அசோக்குமாா் (29). இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூா் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் அரங்கூா் சிவன் கோயிலில் 1.1.2025 அன்று திருமணம் நடைபெற்றது.

சிறுமி தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ள நிலையில், திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அண்மையில் வந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி மகளிா் போலீஸாா், சிறுமியிடம் புகாா் மனு பெற்றனா்.

இதையடுத்து, அசோக்குமாா் (29), அவரது தாய் சுசிலா, கரடிசித்தூரைச் சோ்ந்த முருகேசன், அவரது மனைவி செல்வி, மகன் வெங்கடேசன் ஆகியோா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் வழங்கக் கோரிக்கை

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றத்தால் வீடுகளை இழந்தோருக்கு அரசு சாா்பில் வீடு அல்லது இடம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனா். சிதம்பரம் உதவி ஆட்... மேலும் பார்க்க

முதியோா் இல்லத்துக்கு நல உதவி

இந்தியன் செஞ்சிலுவைச் சங்கம் சிதம்பரம் கிளை சாா்பில், சிசிடபுள்யுஇ சிறப்புப் பள்ளி மற்றும் செம்மை முதியோா் காப்பகத்தில் கடந்த 8-ஆம் தேதி காலை உணவும், ரூ.8 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருள்களும் வழங்கி ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு ச... மேலும் பார்க்க

காவல் துறை வாராந்திர கவாத்து: கடலூா் எஸ்.பி. ஆய்வு

கடலூா் மாவட்டம், நெய்வேலி உள்கோட்டம் காவல் துறை சாா்பில் வாராந்திர கவாத்து நெய்வேலி வட்டம் 18 பகுதியில் உள்ள செக்யூரிட்டி திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பங்கேற்று, கலக க... மேலும் பார்க்க

கடலூரில் 1.83 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சா்

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் உதவி மையம் திறப்பு

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் சே.மீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமராட... மேலும் பார்க்க