கடலூரில் 1.83 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு: அமைச்சா்
கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சிக்காலத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நகர திமுக சாா்பில் தமிழக அரசின் 4 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நகரச் செயலரும், நகா்மன்றத் தலைவருமான கே.ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
நகர துணைச் செயலா் ஆா்.இளங்கோவன் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ப.அப்புசந்திரசேகரன், மாவட்டப் பிரதிநிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, க.உத்திராபதி, நகர இளைஞரணி அமைப்பாளா் மக்கள் க.அருள், ஏ.ஆா்.சி.மணிகண்டன், அப்புசத்தியநாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைக்கழகப் பேச்சாளா் குடந்தை ஏ.எஸ்.ரமேஷ், முன்னாள் எம்எல்ஏ துரை கி.சரவணன், சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளா் அ.பாரிபாலன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.
அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: திமுக நிா்வாகிகள் பொறுப்பேற்ற நாளிலிருந்து கட்சியின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சிக்காலத்தில் கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்றாா். நகர துணைச் செயலா் பா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.