தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
அரசுக் கல்லூரியில் உதவி மையம் திறப்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான உதவி மையம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சே.மீனா வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூா் கிராமத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2025 - 26ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை உதவி மையம் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
வரும் 27-ஆம் தேதி வரை உதவி மையம் கல்லூரியில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் கல்லூரியில் இயங்கும் மாணவா் சோ்க்கை உதவி மையம் மூலமாக கட்டணமில்லாமல் விண்ணப்பிக்க, தங்களது மதிப்பெண் பட்டியல், வகுப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, புகைப்படம், கைப்பேசி உள்ளிட்ட ஆவணங்களுடன் கல்லூரிக்கு வந்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இணைய முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தாா்.