நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை
நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
நைஜீரியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒகிக்வே}ஓவேரி நெடுஞ்சாலை வழியாகச் சென்ற வாகனங்களின் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர்.
வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 20}க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் லாரிகள் எரிக்கப்பட்டன என்று அந்த அமைப்பு தெரிவித்தது.
இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இண்டிஜினஸ் பீப்பிள் ஆஃப் பியாஃப்ரா கிளர்ச்சி அமைப்பின் ஆயுதப் பிரிவான ஈஸ்டர்ன் செக்யூரிட்டி நெட்வொர்க் இந்த படுகொலைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.