செய்திகள் :

என்எல்சி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து!

post image

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்திய நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலைய விரிவாக்க மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் புகை சூழ்ந்தது.

3 மணி நேரத்திற்கும் மேலாக தீப்பற்றி எரிந்து வரும் நிலையில் மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அனல் மின் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியது!

மருத்துவ கல்லூரிகள் தரவரிசை வரைவு: கருத்து கேட்கிறது என்எம்சி!

மருத்துவ கல்லூரிகளுக்கு தரவரிசை மற்றும் அங்கீகாரம் அளிப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை மீதான கருத்துகளையும் பரிந்துரைகளையும் அனுப்பலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இது தொடா்பாக எ... மேலும் பார்க்க

தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் கூடுதல்: தமிழக அரசு பெருமிதம்!

தொழிலாளா்கள் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 97 லட்சம் உயா்ந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில்... மேலும் பார்க்க

நெட் தோ்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு!

நெட் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரில் ஒதுக்கப்பட்ட பணிகள் துல்லியமாக நிறைவேற்றம்! - இந்திய விமானப் படை பெருமிதம்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தேசிய நோக்கங்களுக்கு ஏற்பவும் வெற்றிகரமாக நிறைவேற்றியதாக இந்திய விமானப்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் ... மேலும் பார்க்க

ரூ.100 கோடி நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பாணை!

கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்ச... மேலும் பார்க்க

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு: தற்போதைய சந்தை மதிப்பு மறு ஆய்வு

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துக்கான தற்போதைய சந்தை மதிப்பை மறு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னை விமான... மேலும் பார்க்க